015: சிங்பொரிமோ 2020 நாள் 18 : உண்பதற்கு முன் எடுத்தப் புகைப்படங்கள்

இன்று என்ன சாப்பிட்டீங்க என்று எவரும் கேட்காத கேள்விக்கு
சாட்சி சொல்ல வருவார்கள்
உண்பதற்கு முன்
நான் எடுத்தப் புகைப்படங்கள்
நிழல்கள் இல்லா ஒளியுடன்
நிறங்களின் உலா
ஒரு சதுரங்க சிறையில்

வாசம் மட்டும் சரணடையாமல்
காற்றில் ஊஞ்சலாடுகிறது
விரைவில் அதையும் கட்டிபோட்டு
Instagram சிறைச்சாலையில் பதிவேற்றிடுவேன்
என்னுடன் புது கைதிகளை சேர்த்திடுவேன்