002. Tinder கவிதை(for NUS TLS 38th Exco’s Magazine)

அவன் விரல்களை தீண்ட வேண்டிய என் விரல்கள் கைத்தொலைப்பேசியை தேய்த்து  கொண்டிருக்கின்றன
வலது பக்கமா இடது பக்கமா?
பிடத்திருக்கா பிடிக்கல்லையா?
காதல் சந்தையில் விற்பனைக்கான பொருளாய் நிற்கின்றேன்
அப்படியே பொருந்தி விட்டால்
அர்த்தமில்லா உரையாடல்கள், சமூக ஊடகங்களில் மனவிளையாட்டுகள், திரையரங்குகளில் சந்திப்புகள்
அத்தனையும் முடிந்த பிறகு நண்பர்களாக பிரிவதே மிக சிறப்பு என அந்த கதை முடிவு பெறுகிறது
காதல் சந்தையில் தொடர்கிறது என் பயணம்,
மீண்டும் புதியதோர் கதை
முடிவில்லா தொடர்கதை
காதல், கல்யானம் என்ன வேடிக்கை

fingers meant to lightly touch his fingers are swiping a phone
right or left
do i like him or not
in the market of love, i stand as a commodity to be sold
if we are matched, meaningless conversations ensue
after mind games on social media, and movie dates, the story ends
he says, "it's better we part as just friends"
my journey in the market of love resumes
a new story begins
an endless story
love, marriage, what a joke!

You might want to read a related post on my Tinder experience.