007. எருமை(இளம்பிறை)

படுங்கோரம் நீ
எருமை நீ
முட்டாள் நீ
புழுதி நீ
பூமிக்கு பாரம் நீ
வீண்பொருள் நீ
பயனில்லா இருள் நீ

இறந்து போ நீ
கரைந்து போ நீ
உன் துயரங்களை துறந்து போ நீ

வெளியில் கேட்ட குரல்கள் என் குரலாகி உள்ளே சத்தமாக எதிரொலிக்க நிழல் எது நிஜம் எது என்று அறியாமல் என்னையே தொலைத்தேன் குழம்பினேன் வாழ்வின் அர்த்தத்தை மறந்தேன்
சொந்த வாசம் மறந்த பூவாய் உதிர்ந்து விழுந்தேன்
கடவுளின் படைப்பு தாயின் துடிப்பு வீணாக தான் போகுமோ?
வீழ்ந்தே தான் கிடக்குமோ?
மீண்டும் எழுந்தேன் உரக்க சொன்னேன்

முட்களும் நான்
மூங்கிலும் நான்
சேரும் நான்
செங்கதிரும் நான்
மயில் தோகையும் நான்
மழை சாரலும் நான்
தாரகைகள் பூரணமில்லை
ஆனால் மிளிர்வதை அவை நிறுத்துவதும் இல்லை
மிளிர்வேன் நான்
துணிவேன் நான்
எழுவேன் நான் ஏனெனில் நான் எருமை அல்ல எரிமலை

you’re a buffalo
you’re hideous
you’re foolish
you’re dust
you’re a burden to this world
you’re a wasteful thing
you’re useless darkness

perish
dissolve
renounce your sorrows

voices that I heard outside became mine and echoed loudly within me
i got lost not knowing whether it was real or just my imagination
i was confused
i forgot the meaning of life
i fell as a flower which forgot its aroma

god’s creation
mother’s heartbeat
will it all go to waste
will it remain fallen


i rose again
loudly, I said

i am the thorns
i am the clouds
i am the mud
i am the ray of sun
i am the feather of peacock
i am the rain showers

stars aren’t complete
yet they don’t stop sparkling

i will sparkle
i will dare
i will rise

because i am not a buffalo; i’m a volcano. 

You might want to read a related post on my insecurities.